நீலகிரி மாவட்டத்தில் வீடற்ற ஆதிதிராவிடர் இன மக்களுக்கு, வீட்டுமனை வழங்க நில எடுப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் வீடற்ற ஆதிதிராவிடர்இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தனியார் பேச்சுவார்த்தை மூலம் (பிரைவேட் நெகோசியேசன்) நில எடுப்பு செய்யப்படுகிறது. அரசு நிர்ணயிக்கும் விலைக்கு பட்டா நிலத்தை அரசுக்கு தர முன்வரும் நில உரிமையாளர்களிடம், மாவட்டகுழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி விலைநிர்ணயம் செய்வார்கள்.
இதில் விருப்பம் உள்ள நில உரிமைதாரர்கள், தங்களது சம்மதத்தை உதகையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 76-ல் அமைந்துள்ள மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago