திருப்பூர் மாவட்டத்தில் - சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 412 பேர் கைது :

திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 412 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை, கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை, சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 156 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 48, கஞ்சா 2.4 கிலோ, தடை செய்யப்பட்ட போதை பொருள் 11, 851 பாக்கெட்டுகள், சேவல்கள் 14, ரொக்கம்ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 370 மற்றும் 12 இருசக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது, கள்,சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 256 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 178 மது பாட்டில்களும், கர்நாடக மதுபானங்கள் 605 பாட்டில்களும், பாண்டிச்சேரி மதுபானங்கள் 6 பாட்டில்களும், சாராயம் 41.5 லிட்டர், ஊறல் 308 லிட்டர், கள், 253.5 லிட்டர் ஆகியவையும், ரொக்கம் ரூ.41 ஆயிரத்து 90, 73 இருசக்கர வாகனங்கள், 33 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்