நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கேத்தி, எல்லநள்ளி உட்பட பலபகுதிகள் பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இவர்களுக்காக 2010-ம் ஆண்டு கேத்தி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் ஒரே அறை என்பதால், மாற்று இடம் கோரி அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் கேத்தி அருகே உள்ள பிரகாசபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்து 180 வீடுகள் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டன. வீட்டுச்சாவிகளை விரைந்து ஒப்படைக்க வலியுறுத்தி, ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் பயனாளிகள் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago