மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசுப்பள்ளி மாணவர்களிடம் பணம் வசூலிப்பது ஏன்...? :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மாறி செல்லும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க ரூ.500 வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,804 பள்ளிகளில் பயிலும் 2,27,342 மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டது. இதனை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பப்படும் பாடப்புத்தகங்களை வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக ளுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது.

இதற்கான செலவுகளுக்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 22 ஒன்றியங்களுக்கு ரூ.7,52,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை பள்ளி எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து அந்தந்த வட்டார கல்வி அலுவலரின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் பெற பணம் கேட்பது குறித்து விழுப்புரம் மாவட்ட பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, “பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வட்டார கல்வி அலுவலகம் எங்களுக்கு வழங்குவதில்லை. நாங்களே சென்று எங்கள் செலவில் அதனை கொண்டு வருகிறோம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 22 ஒன்றியங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் இதே நிலைதான் உள்ளது. ஆண்டுக்கு 3 பருவத்திற்கும் இப்படி சுமார் ரூ.6 ஆயிரம் செலவழிக்கிறோம். இத்தொகையை யாரிடம் நாங்கள் வசூலிப்பது? அதனால்தான் மாணவர்களிடம் அந்த தொகையை பெற்று வாகன செலவுக்கு பயன்படுத்துகிறோம்” என்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கிருஷ்ணபிரி யாவிடம் கேட்டபோது, “விசா ரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்