‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் நிராகரிக்கப்படும் - மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டும் : அலுவலர்களுக்கு திருவாரூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பேசியது:

`உங்கள் தொகுதியில் முதல் வர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பொதுவான அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்கள் அனைத்தும், தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுக்கள் நிராகரிக்க வேண்டிய நிலையில் இருந்தால், அதற்கான விளக்கத்தை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். மனு அளித்தவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை அளிக்கின்ற வகையிலும், மனுக்கள் மீது விரைந்து தீர்வுகள் காணப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் விளங்கும் வகையிலும் அலு வலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான(பொ) மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்