பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை : போலீஸாருக்கு ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் போலீ ஸாரின் பணிகளை நேற்று ஆய்வு செய்ய வந்த மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், மணல் கடத்தல், பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தஞ்சை சரக டிஐஜி பிரவேஸ் குமார், திருவாரூர் எஸ்.பி சீனிவாசன் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்டம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, திருவாரூர் ஆயுதப் படை காவலர் குடியிருப்பில் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில், ரூ.9 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் அமைப்பை திறந்துவைத்து, மரக்கன்றுகளை நட்டார்.

முன்னதாக, மன்னார்குடியில் டிஎஸ்பி அலுவலகத்தில் ஐ.ஜி பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, மணல் கடத்தல் போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வடுவூர் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்