வேலூர் உப கோட்ட மின் வாரியத்தில் வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என உதவி செயற்பொறியாளர்(மேற்கு) கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் உப கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர் மற்றும் இறைவன் காடு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, தேர்வு செய்யப்பட்ட நாளில் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதில், வரும் 21-ம் தேதி கொணவட்டம், தேவி நகர், செது வாலை, மருதவள்ளிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களிலும், வரும் 22-ம் தேதி வேலூர் கன்சால்பேட்டை, அருகந்தம் பூண்டி பெரிய தெரு, எல்ஐசி காலனி, கிரீன் சர்க்கிள், நறுவீ மருத்துவ மனை, சமத் நகர், மாங்காய் மண்டி பகுதிகளிலும், வரும் 23-ம் தேதி விருதம்பட்டு தென்றல் நகர், புதிய பைபாஸ் ரோடு, புதிய பேருந்து நிலையம், விரிஞ்சிபுரம், ஜாபர்கான் பேட்டை, இறைவன்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
வரும் 24-ம் தேதி சேண்பாக்கம், பெருமாள் நகர், கருகம்பத்தூர்,கீழ்மொணவூர், மேல்மொணவூர் மற்றும் வசந்தநடை, வல்லண்ட ராம், அண்ணாச்சிபாளையம் பகுதிகளிலும், வரும் 25-ம் தேதி முள்ளிப்பாளையம், மதினா நகர், சின்னையா நகர், ஜானி பூந்தோட்டம், பெருமாள் நகர், கஸ்பா, எம்.சி ரோடு, கந்தனேரி, கழனிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், வரும் 26-ம் தேதி இறைவன்காடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதேபோல், வரும் 28-ம் தேதி மக்கான் கன்சல்பேட்டை, ஆற்காடு ரோடு, சைதாப்பேட்டை, அம்பேத்கர் நகர், சதுப்பேரி, சிறுகாஞ்சி, ஜீவாநகர், கே.கே.நகர், சின்ன அல்லாபுரம் பகுதிகளிலும், வரும் 29-ம் தேதி அருகந்தம்பூண்டி பெரிய தெரு, ஜெயராம் செட்டித்தெரு, சிஎம்சி அவுட் கேட் பகுதிகளிலும், வரும் 30-ம் தேதி வசந்தபுரம் பத்மாவதி நகர், சுப்பிரமணி அய்யர் தெரு, கானாறு பர்மா காலனி பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி அப்துல்லாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், வரும் 2-ம் தேதி அரியூர், ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago