விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் நேற்று இளம் பெண் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் சேதுராமன் உள்ளிட் டோர் விசாரித்தனர்.அப்போது அவர் கூறியது:
புதுச்சேரி மதகடிப்பட்டை அடுத்த கலிதீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்த தயாளன்-மரகதம் தம்பதியரின் இரண்டாவது மகள் இந்துமதி (30). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றியவருக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. 8 மாதங்கள் கடந்த நிலையில் 2020 ம் ஆண்டு இந்துமதிக்கும் உதவி காவல் ஆய்வாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உதவி காவல் ஆய்வாளர் பிரிந்து சென்றார். மீண்டும் சேர்ந்து வாழ வரவில்லை. இதனால், தனது வாழ்க்கை வீணாகிவிட்டது. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் அவர்களை சமாதானப்படுத்தி, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து இந்துமதி, அவரது தாய் உள்ளிட்டோர் போராட்டத்தைக் கைவிட்டு எஸ்பி அலுவலகத்துக்குச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago