டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை நெல் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ள முதல்வருக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ள நிலையில், விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்துக்காக ரூ.61.09 கோடி நிதி ஒதுக்கி அறிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம், இந்த சிறப்பு திட்டத்தில் பம்புசெட் மூலம் குறுவை பணிகளை தொடங்கிய விவசாயிகள், ஆற்றுப்பாசன விவசாயிகள் என அனைவருக்கும் மானியம் வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கத் தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஒருங்கிணைப் பாளர் ப.ஜெகதீசன்: முதல்வர் அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திரம் மற்றும் கை நடவுக்கான மானியம் வழங்க வேண்டும். குறுவைக்கான பயிர்க் கடனை தகுதியான விவசாயிகளுக்கு வழங்கினால், இலக்கை அடைய முடியும். குறுவை முன்பட்ட நடவு செய்துள்ளவர்களுக்கும் இந்த திட்டத்தில் பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago