மோர்தானா அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு? :

By செய்திப்பிரிவு

மோர்தானா அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக் காக நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப் பட்டுள்ளது. சுமார் 11.50 மீட்டர் உயரமுள்ள அணையில் சுமார் 260 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 11.40 மீட்டர் உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது. இந்த அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையில், மோர்தானா பாசனக் கால்வாய்கள் பல இடங்களில் சேதப்படுத்தப்பட்டு தண்ணீரை திருடும் நிலை உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், கால்வாய் சீரமைப்புப் பணிக்காக ரூ.48 லட்சம் ஒதுக்கீடு செய்ததுடன் கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு கால்வாய் சீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜூன் 18-ம் தேதி மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினு டன் டெல்லி சென்றுள்ளதால் நாளை (19-ம்) தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்