செங்கல்பட்டு மாவட்டத்தில் : சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி :

கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக ரூ.3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் உத்தரவின் பேரில், பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதேபோன்று, தொற்றால் பாதிக்கப்பட்டு, வருமானமின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய நிலை, குடும்பத் தலைவர் இறந்ததால் அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அவர்களுக்கு எந்த வகையான நிவாரண உதவி வழங்குவது குறித்து தமிழக அரசு மூலம், சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகஅலுவலர் மூலம் கடந்த சில நாட்களாக இப்பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் கணக்கெடுப்பு குழுவினர் நேரடியாகச் சென்று கணக்கெடுத்து வருகின்றனர். கணக்கெடுக்கும் பணி தொடர்பான அறிக்கை அரசிடம் விரைவில் வழங்கப்படும். அதன், அடிப்படையில் கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்துக்கு அரசின் நலத்திட்ட அறிவிப்புகள் வெளியாகும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்