திருவண்ணாமலை நகராட்சியில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது என நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை நகராட்சியில் 18 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள நகராட்சி பெண் கள் மேல்நிலைப் பள்ளி, செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற் சாலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம் சாலையில் உள்ள லெபனான் பங்களாவில் (தனபாக்கியம் மருத்துவமனை எதிரில்) கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 வகை தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு) ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அசலாகவும் அல்லது நகலாக கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago