வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நவீன படுக்கைகள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பாதிப்பு அதிகரிப்பால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள், பல்வேறு சங்கங்கள் சார்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதற் கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் வசதிகளுடன் கூடிய ஐசியு பிரிவில் பயன்படுத்தும் 50 நவீன கட்டில்களுடன் கூடிய படுக்கைகளை வழங்கியுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வசம் இந்த நவீன படுக்கைகள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தார். மேலும், இரண்டாம் கட்டமாக 50 படுக்கைகளையும் வழங்க இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago