ஆலங்குடியில் 2 கடலை மில்களுக்கு சீல் வைப்பு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 50-க்கும் மேற்பட்ட கடலை மில்கள் உள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இந்த மில்கள் இயக்கப்படவில்லை.

எனினும், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று இயக்கப்பட்ட 2 கடலை மில்களை வட்டாட்சியர் பொன்மலர் தலைமையிலான அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். முன்னதாக அங்கு பணியில் ஈடுபட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்