கரூர் மாவட்டத்தில் 45 இடங்களில் ஏற்பாடு - கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அதிக ஆர்வம் :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் 45 இடங்களில் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டினர்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 20-ம் தேதி தொடங்கியது.

ஆனால், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாத நிலையில் 4 நாட்களாக தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. இந்நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

இதற்காக கரூர் மாவட்டத்துக்கு 16,500 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. மாவட்டத்தில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 7 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 45 இடங்களில் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர் கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 18 வயதுக்கு மேற் பட்ட பலர் நேற்று காலையிலிருந்தே ஆர்வமுடன் குவிந்தனர்.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்குட்பட்டவர்கள் 1,127 பேர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 460 பேர் என மொத்தம் 1,587 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இப்பணிகளை சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் மேற்பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்