திருவாரூர் மாவட்டம் மன் னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 3-வது முறையாக வெற்றி பெற்ற பின்னர், மன்னார்குடியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா நேற்று வந்தார். அங்கு மன்னார்குடி நகர வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
இதில், கோட்டாட்சியர் அழகர் சாமி, வட்டாட்சியர் தெய்வநாயகி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உமா மகேஸ்வரி, வேளாண் துறை இணை இயக்குநர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் கமலா, மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஆர்.பி.ராஜா கூறியது: மன்னார்குடி நகரத்தில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மன்னார்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுவதற்கு 153 படுக்கை வசதிகள் உள்ளன. இதுதவிர மன்னார்குடியிலேயே மேலும் 300 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் அமைப்பதற்கான நடவடிக்கை கள் தொடங்கியுள்ளன. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago