தி.மலை மாவட்டத்தில் புதிய உச்சம் - கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 578 பேருக்கு பாதிப்பு : ஒரு மாதத்தில் 35 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அதிகளவில் கூடினர். இதனால், கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. புதிய கட்டுப்பாடுகள், ஊரடங்கு என அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டாலும் கரோனா தொற்று பரவலை தடுக்க முடியவில்லை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு 19,883 - ஆக (ஏப்ரல் 6-ம் தேதி) இருந்தது. 19,408 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 188 பேர் சிகிச்சை பெற்றனர். அப்போது, மாவட்டத்தில் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 287-ஆக இருந்தது.

அதன்பிறகு, கரோனா தொற்று பரவல் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 578 பேர் கரோனா தொற்று பாதிக்கப் பட்டுள்ளதாக நேற்று வெளியான பட்டியலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், பாதிக் கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 26,547-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து 24,200 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2,025 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும், ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 322 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிய கட்டுப்பாடுகள், ஊரடங்கு என அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டாலும் கரோனா தொற்று பரவலை தடுக்க முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்