திருவாரூரில் கூடுதலாக 200 படுக்கை வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எம்எல்ஏ பூண்டி கலை வாணன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சாந்தா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா ஆகியோரை, திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நேற்று சந்தித்து கரோனா தொற்று பரவல் குறித்தும், இதற்காக வழங்கப்படும் சிகிச்சை முறை, படுக்கை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து,திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியர் வே.சாந்தா மற்றும் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் ஆகியோ ருடன் சென்று ஆய்வு நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கூறியது: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் செலவிடப் படாமல் உள்ளது. தற்சமயம் நடத்தை விதிமுறைகள் தளர்வு பெற்றுவிட்டன. இந்தச் சூழலில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன் படுத்தி, கரோனா நெருக்கடியை விரைவாக சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க அந்த கல்லூரி நிர் வாகம் அனுமதித்துள்ளது. இதை ஆட்சியரிடம் தெரிவித்து, கரோனா சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த கல்லூரி அனுமதித்துள்ள இடம் போது மானதாக உள்ளதா என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைத்துவிட்டால், திருவாரூரில் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago