வேலூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு புதிய நடைமுறை நாளை முதல் வரும் 24-ம் தேதி அமலுக்கு வருகிறது. அதன்படி, அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூரில் இருந்து பேரணாம்பட்டு, குடியாத்தம், கணியம்பாடி, ஒடுக்கத்தூர், பொன்னை, ராணிப்பேட்டை, பாகாயம், கிறிஸ்டியான்பேட்டை, திருப்பத்தூர், சேர்க்காடு திருவள் ளுவர் பல்கலைக்கழகம், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago