ஆண்டிபட்டியில் அதிகபட்சம் 25.2 மி.மீ. மழை பதிவானது. தேக்கடியில் 23.2, பெரியகுளத்தில் 20, உத்தமபாளையத்தில் 19.4, கூடலூரில் 4.2 மி.மீ. மழை பதிவானது. இதனால் இப்பகுதியில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன மழையால் குன்னூர், காமயகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காமய கவுண்டன்பட்டி விவசாயி ஜெகதீசன் கூறியதாவது: கம்பம், உத்தமபாளையம், கூடலூர், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் பச்சை, பூவன், செவ்வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றினால் ஏராளமான வாழை மரங்கள் விழுந்துவிட்டன. கடந்த ஆண்டு கரோனாவால் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதமும் இதேபோல் சூறைக்காற்றினால் மரங்கள் சேதமடைந்தன. தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago