திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டை தொடர்ந்து நிகழாண்டி லும் கரோனா ஊரடங்கு படிப்படி யாக அமலுக்கு வரும் நிலையில், உரிய விலை கிடைக்காது என்ற அச்சத்தில் பருத்தியை பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கோடை பயிராக உளுந்து, பயறு வகைகளுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பருத்தி சாகுபடி நடைபெற்றது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக கோவை, திருப்பூர் உட்பட பருத்தி பஞ்சு வாங்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், பஞ்சு மற்றும் துணி ஆலைகள் சரிவர இயங்கவில்லை. இதன் காரணமாக பருத்தியை கொள் முதல் செய்ய வியாபாரிகள் பலர் முன்வரவில்லை. மேலும், அரசு சார்பில் திறக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங் களுக்கு பருத்தியை எடுத்துச்சென்று விற்பதற்கும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் அவதிய டைந்தனர். இதனால், விளைந்த பருத்தியை லாபமின்றியும், மிகக் குறைந்த விலைக்கும் விற்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலை நிகழாண்டிலும் ஏற்படும் அளவுக்கு, தற்போது படிப்படியாக ஊரடங்கை அரசு அமல்படுத்தி வருவதால், விவசாயிகள் பலரும் பருத்தி சாகுபடி செய்ய தயங்கி வருகின்றனர். இதனால், கடந்த ஆண்டு 21 ஆயிரம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பளவு நிகழாண்டு 10 ஆயிரம் ஏக்கருக்கும் குறைவாகவே உள்ளது.
இதுகுறித்து பாமணி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா(எ) ராம் குமார் கூறியது: கடந்தாண்டு பருத்திக்கு வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.30 மட்டுமே விலை நிர்ணயம் செய்தனர். திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.50 வரை விலைபோனது. ஆனால், அங்கு எடுத்துச்சென்று விற்பதற்கு 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், நிகழாண்டும் கரோனா ஊரடங்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதால், வழக்கமாக 5 ஏக்கர் சாகுபடி செய்யும் நான் தற்போது 3 ஏக்கராக குறைத்துள்ளேன்.
என்னைப்போலவே பாமணி, உடையார்மானியம், கர்ணாவூர், தென்கரைவயல், திருவாரூர் சாலை சவளக்காரன், அரவத் தூர், முதல் சேத்தி, 2-ம் சேத்தி, 3-ம் சேத்தி உள்ளிட்ட கிராமங்களிலும், திருவாரூர், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடியை நிகழாண்டில் கைவிட்டுள்ளனர் என்றார்.
இதுகுறித்து வேளாண்மை துறை அலுவலர்கள் கூறியபோது, “கரோனா தொற்று பரவ லைத் தடுக்க விதிக்கப்படும் கட்டுப் பாடுகள் காரணமாக பருத்தியின் தேவை குறைந்துள்ளது. இதனால், பருத்தி கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்து, சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்துவிட்டது. கரோனா வைரஸ் தொற்று நெருக்கடி முடிந்தவுடன் இந்த நிலை சீராகிவிடும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago