திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - அடிப்படை வசதிகளை மேம்படுத்த கரோனா தொற்றாளர்கள் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 215 படுக்கைகள் உட்பட 415, மத்தியப் பல்கலைக்கழகத்தில் 300, மன்னார்குடி தலைமை மருத்துவமனையில் 150, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் 75, வலங்கைமான் தனியார் தொழில்நுட்பக் கல் லூரியில் 100 மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 82 என மொத்தம் 1,122 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பிவிட்டநிலையில், கரோனா தொற்றாளர்கள் அனைவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அங்கு கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளர்களில் சிலர் கூறியது:

எங்களுக்கு அரசு அறிவித்த நெறிமுறைகளைப் பின்பற்றி அடிப்படை வசதிகள் வழங்கப் படவில்லை. இதுகுறித்து தெரிவித்தாலும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு சில பணியாளர்களே பரிந்துரைக்கின்றனர். மேலும், குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி குறைவாக உள்ளது.

பொதுவாக, கரோனா தொற் றாளர்கள் சுடுதண்ணீர்தான் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர். ஆனால், இங்கு சுடு தண்ணீர் வசதிக்கு வெளியில்தான் செல்ல வேண்டும். இதனால், கரோனா வார்டிலிருந்து தொற்றா ளர்கள் சகஜமாக வெளியே சென்றுவருகின்றனர். இதன் காரணமாகவே கரோனா தொற்று அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

எனவே, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு செய்து கொடுக்கப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைத்து, அன்றாடம் கண் காணிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, “புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்