விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட 146 வேட்பாளர்களில் 131 பேர் தங்கள் காப்புத் தொகையை இழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் 14, வில்லிபுத்தூரில் 15, சாத்தூரில் 27, சிவகாசியில் 26, விருதுநகரில் 18, அருப்புக்கோட்டையில் 26, திருச்சுழியில் 20 வேட்பாளர்கள் என மொத்தம் 146 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையில் அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும், சாத்தூரில் அமமுக வேட்பாளர் தவிர மற்ற வேட்பாளர்கள் அனை வரும் தங்கள் காப்புத் தொகையை (டெபாசிட்) இழந்தனர். தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் 6-ல் ஒரு பங்கு வாக்குப் பெற்றிருந்தால் மட்டுமே காப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.
அதன்படி, ராஜபாளையத்தில் புதிய தமிழகம், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உட்பட 12 வேட்பாளர்கள் காப்புத் தொகையை இழந்தனர்.
வில்லிபுத்தூரில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, புதிய தமிழகம் உட்பட 13 பேர் காப்புத் தொகையை இழந்தனர்.
சாத்தூரில் நாம் தமிழர், புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் உட்பட 24 பேர் காப்புத் தொகையை இழந்தனர்.
சிவகாசியில் நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 24 பேர் காப்புத் தொகையை இழந்தனர். விருதுநகரில் நாம் தமிழர், அமமுக, சமக வேட்பாளர்கள் உட்பட 16 பேர் டெபாசிட் இழந்தனர்.
அருப்புக்கோட்டையில் தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம், புதிய தமிழகம் உட்பட 24 பேரும், திருச்சுழி தொகுதியில் நாம் தமிழர், அமமுக, புதிய தமிழகம், மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்கள் உட்பட 18 பேர் காப்புத் தொகையை இழந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago