திண்டுக்கல்லில் நேற்று மாலையில் மழை பெய்ததால் வெப்பத்தின் கடுமை சிறிது குறைத்தது.
அக்னி நட்சத்திரம் வெயில் நேற்று முதல் தொடங்கி 21 நாட்கள் நீடிக்கும். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். நடப்பாண்டில் அரசின் கட்டுப்பாடுகளால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை யில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் நகரில் குளிர்ந்த காற்று வீசியது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளே மழை பெய்ததால் கோடை மழை அதிக அளவில் பெய்ய வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago