கரோனா வார்டில் இருந்து தப்பிய இளைஞர் :

திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த மனநலம் பாதித்த ஒருவர் தப்பியோடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த 28-ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் தப்பியோடி னார். இந்த தகவலறிந்த காவல் துறையினருடன், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை அரசு மருத்துவர் புகழேந்தி தலைமையிலான குழுவினர் மண்டலவாடிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த கரோனா நோயாளியை பிடித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப்பெற்று வரும் கரோனா நோயாளிகளை கண்காணிக்க நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்