155 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 155 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்தது, பிரச்சாரம் செய்தது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 155 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில், 16 வழக்குகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய புகாரின்பேரில் காவல் நிலையங்களில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு 45 வழக்குகள், 2019-ம் ஆண்டு 75 வழக்குகள் பதிவான நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்