விஐடி ஆந்திராவில் - கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

விஐடி ஆந்திராவில் பொறி யியல் அல்லாத பட்டப் படிப்புகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் கூடிய மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க லாம்.

இதுகுறித்து விஐடி ஆந்திர பிரதேசம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘விஐடி ஆந்திர பிரதேசத்தில் 2021-22 கல்வியாண்டுக்கான பொறியியல் அல்லாத பிபிஏ, பிகாம், உள்ளிட்ட இளநிலை படிப்பு, முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு, வரும் மே 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

100 சதவீதம் உதவித் தொகை

மாணவர் சேர்க்கையில் ஜி.வி கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு 100 சதவீதம் கல்வி உதவித் தொகையும் ராஜேஸ்வரி அம்மாள் நினைவு கல்வி உதவித்தொகை திட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், மாணவராக இருந்தால் 50 சதவீதம், மாணவியாக இருந்தால் 75 சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இளநிலை பட்டப்படிப்பில் 90 சதவீதம் மதிப்பெண் பெற்ற வர்கள் முதுநிலை படிப்பில் சேருபவர்களுக்கு 100 சதவீதம் உதவித்தொகையும் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 50 சதவீதமும், மாணவியாக இருந்தால் கூடுதலாக 25 சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்