திருப்பத்தூர் மாவட்டத்தில் 119 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 119 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,593-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக 995 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 156-ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் 176 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முடிவுக்காக 9,800 பேர் காத்திருக்கின்றனர். மாவட்டம் முழுவதும் 400 இடங்கள் கட்டுப்படுத் தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.

அதில், திருப்பத்தூர் நகராட்சி, ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் அங்கு சுகாதாரப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும், கரோனா தொற்று ஆரம்பக்கட்டத்தில் உள்ள வர்களை கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க மாவட்ட சுகாதாரத்துறையினர் ஏற்பாடு களை செய்து வருகின்றனர்.

கரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த 6,567 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணிப் பில் வைக்கப் பட்டுள்ளனர். கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 53 ஆயிரத்து 500 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 14 ஆயிரம் பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல்அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அத்தியா வசியப் பொருட்களை தவிர மற்ற அனைத்துக்கடைகளும் மூடியிருக்க வேண்டும். மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் காலை முதல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்