திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து(49), அதிமுக வேட்பாளரைவிட 29,102 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் காடுவாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, கோட்டூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக பதவி வகித்து வருகிறார். குடிசை வீட்டில் வசித்து வரும் மாரிமுத்து, அவரது தாயார், மனைவி என அனைவருமே விவசாய கூலித் தொழிலாளர்கள். இவரது வீட்டில் காஸ் அடுப்புகூட கிடையாது.
தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட மாரிமுத்து வேட்புமனு தாக்கல் செய்தபோது, தன்னிடம் குடிசை வீடு, கையிருப்பில் ரொக்கம் ரூ.3,000, வங்கிக் கணக்கில் ரூ.58,000 மட்டுமே உள்ளன என தெரிவித்து இருந்தார்.
மாரிமுத்துவின் இந்த எளிமை திருத்துறைப்பூண்டி மக்களைக் கவர்ந்ததால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு அது நன்கு கைகொடுத்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மாரிமுத்து 95,785 வாக்கு கள் பெற்று, 29,102 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட் பாளர் சுரேஷ்குமாரை(66,683 வாக் குகள்) வென்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago