திருவாரூரில் 4 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை - வெற்றி கொண்டாட்டங்களை கட்சியினர் தவிர்க்க வேண்டும் : மாவட்ட தேர்தல் அலுவலர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் 336 வாக்குச்சாவடி கள், மன்னார்குடி தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள், திருவாரூர் தொகுதியில் 388 வாக்குச்சாவடி கள், நன்னிலம் தொகுதியில் 373 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,454 வாக்குச்சாவடிகளில் பயன் படுத்தப்பட்ட 1,718 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவாரூர் திருவிக அரசினர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று(மே 2) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேசைகள் போடப்பட்டு, 28 சுற்றுகளாக வாக்குகள் எண் ணப்பட உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை திருத்துறைப் பூண்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,39,972 பேர். இவர்களில் 88,070 ஆண்கள், 96,095 பெண்கள் என மொத்தம் 1,84,165 பேர்(76.74 சதவீதம்) வாக்களித்துள்ளனர். மன்னார் குடி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,59,916 பேர். இவர்களில், 90,889 ஆண்கள், 1,02,334 பெண்கள் என மொத்தம் 1,93,223 பேர்(74.34 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

திருவாரூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,82,573 பேர். இவர்களில், 1,00,494 ஆண்கள், 1,06,011 பெண்கள், 5 இதரர் என மொத்தம் 2,06,510 பேர்(73.08 சதவீதம்) வாக்களித்துள்ளனர். நன்னிலம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,72,157 பேர். இவர்களில், 1,07,528 ஆண்கள், 1,13,133 பெண்கள், 3 இதரர் என மொத்தம் 2,20,664 பேர்(81.08 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

மேலும், இன்று காலை வரை தபால் வாக்குகளை வழங்கலாம் என்பதால், பதிவான தபால் வாக்கு களின் முழுமையான விவரம் இன் னும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, இன்று ஊரடங்கு அமலில் உள்ளதால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் அரசியல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதையும், பொதுமக்கள் தேவை யின்றி வெளியில் நடமாடுவதையும் தவிர்க்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.சாந்தா, எஸ்.பி கயல்விழி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்