பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க வேண்டும் : திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஆக்சிஜன் கையிருப்பு, சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிமுதல் டோஸ் பலர் எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், 2-வது டோஸ் தடுப்பூசி இல்லாததால், பலரும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

18 வயது பூர்த்தி அடைந்தவர் களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை அரசு மருத்துவமனை வளாகத்தில் எடுக்கப்படாமல் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார சீர்கேடு அதிக அளவில் உள்ளதால், மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்