மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 2,000 சதுரடி பரப்பள வில் புதிதாக அமைக்கப்பட்ட மூலி கைத் தோட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு தனி யாக இயங்கி வருகிறது. இதற்கென ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் நியமிக்கப்பட்டு, சித்த வைத்தியம் பெற வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், சித்த மருத்துவப் பிரிவுக்கு தேவையான மூலிகைகளை உற்பத்தி செய்து கொள்ளவும், மருத்துவ மனையைச் சுற்றி தூய்மையான காற்றை சுவாசிக்க ஏதுவாகவும் மாவட்டத்திலேயே முதன்முறையாக மன்னார்குடி மருத்துவமனை யில் மூலிகைத் தோட்டம் ஏற்படுத் தப்பட்டுள்ளது.
இந்தத் தோட்டத்தில் இன்சுலின் செடி, இரணகல்லி, பூனைமீசை, இடிதாங்கி, நொச்சி, துளசி உட்பட 37 வகையான மூலிகைச் செடிகள், அரளி, ரோஜா போன்ற பூச்செடிகள், கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்ற பழ மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், மண்புழு உரம் தயாரித்தல் அமைப்பும், மீன் வளர்ப்புக் கென தனி தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன. மூலிகைத் தோட்டத் தைச் சுற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்து கின்ற வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புகள் அடங்கிய மூலிகைத் தோட்டத்தை மருத்துவமனை கண் காணிப்பாளர் என்.விஜயகுமார் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், நிலைய மருத்துவர் எம்.கோவிந்தராஜ், பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் நாகராஜ், தலைமை செவிலியர்கள் வசந்தி, அமுதா, செவிலியர்கள் தனலட்சுமி, உமாமகேஸ்வரி, தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மேலாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago