கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு - அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : மன்னார்குடி போலீஸார் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கட்டுப் படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மன்னார்குடியில் உள்ள அரசியல் கட்சிகள், சேவை அமைப்பினரிடம் போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள அரசியல் கட்சி யினர், பொதுநல சங்கங்கள், சேவை அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கரோனா பரவலைக் கட்டுப்படுத்து வதற்காக போலீஸார் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவரிக் கப்பட்டது.

தொடர்ந்து, டிஎஸ்பி இளஞ் செழியன் பேசியது: பொதுமக்கள் மத்தியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே அரசின் உத்தரவு களை போலீஸார் நிறைவேற்றி வருகிறார்கள். கூட்டமாக கூடி நிற்பவர்கள், முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக் காமலும் பொதுமக்கள் உள்ள னர். எனவே, இதுகுறித்த விழிப்பு ணர்வை மக்களிடம் அரசியல் கட்சிகள், சேவை சங்கங்கள், பொதுநல அமைப்புகள் கொண்டு சேர்க்க வேண்டும். போலீஸார் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில், மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சேவை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்