மாதந்தோறும் ரூ.7,500 கரோனா நிவாரணமாக வழங்கக் கோரி - விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

கரோனா நிவாரணமாக மாதந்தோறும் தலா ரூ.7,500 வழங்கக் கோரி நாகை, திருச்சி, புதுக் கோட்டை மாவட்டங்களில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அனை வருக்கும் பணி வழங்க வேண் டும். வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரித்து, தினக்கூலியையும் உயர்த்த வேண் டும். கரோனா தொற்று பரவ லால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு, இயல்பு நிலை திரும்பும் வரை மாதந்தோறும் தலா ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட் களையும் இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல இடங்களில் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பாரதி, ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், விவசாய சங்க மாவட்டப் பொருளாளர் பொன்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, கணபதிபுரத்திலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட் டச் செயலாளர் என்.தங்கதுரை தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஏ.பழனிசாமி பேசினார். மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜு, பொருளாளர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதேபோல, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகி கள் நேற்று மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். இதில், நிர்வாகிகள் க.சண்முகம், எம்.ஜோஷி, எம்.ஆர்.சுப்பையா, ஆர்.சி.ரங்கசாமி, ஏ.தேவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதேபோல, பொன்னமராவதி, குன்றாண்டார்கோவில், ஆவுடை யார்கோவில், அரிமளம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்