தி.மலை மாவட்டத்தில் - 31,070 பேருக்கு தபால் வாக்குகள் : நாளை காலை 8 மணி வரை பெறப்படுகிறது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 31,070 பேருக்கு தபால் வாக்குகள், நாளை காலை 8 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு பணியில் சுமார் 15,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டது.

நேரிடையாக அளிக்கலாம்

மேலும், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முதன் முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் தபால் வாக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது. அவர்கள் விரும் பினால், தபால் வாக்கு அளிக்கலாம் அல்லது வாக்குச்சாவடிக்கு சென்று நேரிடையாகவும் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல், வெளியூர்களில் பணியாற்றும் ஊடகத் துறையினர், அரசு போக்குவரத்துக் கழக தொதிலாளர்கள் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தபால் வாக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 31,070 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் வாக்குப்பதிவுக்கு முன்பாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதர துறைகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சல் துறை மூலமாக தபால் வாக்குகளை அனுப்பி வருகின்றனர்.

வாக்குகள் நிராகரிக்கப்படும்

தபால் வாக்குகளை, வாக்கு கள் எண்ணும் நாளான நாளை (மே 2-ம் தேதி) காலை 8 மணிக் குள் தேர்தல் நடத்தும் அதிகாரியை சென்றடைய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவு றுத்தியுள்ளது. மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு பிறகு வந்து சேரும் தபால் வாக்குகள் நிராகரிக் கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்