மன்னார்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலா ளரைத் தொடர்ந்து ஊழியர்கள் 2 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த வங்கி 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளருக்கு கடந்த 26-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நகராட்சி அதி காரிகளின் அறிவுறுத்தலின்படி 2 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டு, வங்கி ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், நேற்று முன்தினம் முதல் வங்கி திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், வங்கி ஊழி யர்களில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மன்னார்குடி நக ராட்சி ஆணையர் கமலா, சுகா தார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் அங்கு சென்று, வங்கியை 2 நாட்கள் மூட அறிவுறுத்தினர். அதன்படி, அவர்களின் முன்னிலையில் வங்கி மூடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மன்னார் குடி நகரப் பகுதிகளில் நகராட்சி ஆணையர் கமலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, 3,000 சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகளை திறக்கக் கூடாது என அறிவுறுத்தி, அவ்வாறு திறந்திருந்த கடைகளை மூடச் செய்தனர். மேலும், உணவகங்கள், டீ கடைகளில் ஆய்வு நடத்தி, பார்சல் தவிர கடையிலேயே உணவு உண்ணவும், டீ குடிக்கவும் அனுமதித்த 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ.7,500 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கமலா கூறியது:
கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. எனவே, குழந்தைகள், முதியவர்களை வெளியில் அழைத்து வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி கரோனா வைரஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு நகராட்சி சார்பில் கடந்த மார்ச் தொடங்கி தற்போது வரை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, அங்குள்ள வர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago