வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் அரசியல் கட்சியினர், முகவர்கள் மற்றும் செய்தியாளர் களுக்கு கரோனா பரிசோதனை முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேற்று நடைபெற்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தற்போது கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத் துக்குள் செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் செய்தியா ளர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், அதில் நெகட்டிவ் முடிவு வந்தவர் கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்,
எனவே அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஆட்சியர் நேரில் ஆய்வு
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்வு கூட்ட வளாகம், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் செய்தியாளர்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், சார் ஆட்சியர் வந்தனா கர்க் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago