திருப்பத்தூரில் நேற்று பிற்பகல் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை 9 மணிக்கே வெயில் வழக்கம்போல் கொளுத்தியது. பிற்பகல் 1 மணியளவில் வெயில் கடுமையாக இருந்தது. கடும் வெப்பம் காரணமாக சாலையோர பழக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப் பட்டது.
இந்நிலையில், மாலை 3 மணிக்கு திடீரென வானம் இருண்டது. சில்லென்று குளிர்காற்று வீசி, சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை அரை மணி நேரம் பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago