மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் : மீனவத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவத் தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் அழகர்செல்வம் தலைமையில், மாவட்டச் செயலர் செல்வம், மாவட்டப் பொருளாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இம் மனுவைக் கொடுத்தனர்.

அதில், விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், மீன்வளத் துறையால் சரியான புள்ளி விவரம் இதுவரை எடுக்கப்படவில்லை. மீனவர் நலவாரிய அட்டை வழங்க விண்ணப்பித்து பல மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், மீன் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவ, மீனவத் தொழிலாளர்களை வாரியத்தில் இணைத்து, அவர்களுக்கு அரசின் சலுகைகளை வழங்க வேண்டும். அதோடு, மீன்பிடித் தடைக்கால நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்