ரயிலில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை அவசியம் : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்துக்கு ரயிலில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என ஆட்சியர் இரா.கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோ சனைக் கூட்டம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் இரா.கண்ணன் பேசியதாவது:

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கும், ரயிலில் வரும் பயணிகளுக்கும் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். நோய் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள நபர்களை ரயில் நிலையங்களில் உள்ள காத்திருப்பு அறைகளில் தங்க வைத்து, அவர்களுக்கு கரோனா பரிசோ தனை மேற்கொள்ள வேண்டும். கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்புக் கசாயம் ஆகியவற்றை பொது இடங்களில் வைத்து மக்களுக்கு வழங்க வேண்டும்.அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு முகாம்களை நடத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து கேட்டறியப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. மங்கள ராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சார் ஆட்சியர் (சிவகாசி) ச.தினேஷ்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்