திருப்பத்தூர் சக்தி நகரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட் மே 3-ம் தேதி முதல் ஈத்கா மைதானத்தில் இயங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரி வித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி யுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி, நகர் பகுதியில் குறுகலான பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேன்சி ஸ்டோர்ஸ், ஜவுளிக்கடை, நகை அடகு கடைகள் ஆகியவைகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் திறக்க அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் உழவர் சந்தை தனியார் பள்ளி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைபோல, சக்தி நகரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட்டையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் ரயில்வே நிலையம் சாலையை யொட்டியுள்ள ஈத்கா மைதானத்தில் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப் பிரகாசம், நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஈத்கா மைதானத்தில் காய்கறி சந்தையை இடமாற்றம் செய்வது குறித்து ஆய்வு நடத்தினர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் சக்தி நகரில் 135 காய்கறி மார்க்கெட் உள்ளன. இதில், காய்கறி மொத்த வியாபாரிகள் 40 பேரும், எஞ்சியுள்ளவர்கள் சிறு வியாபாரிகளாக உள்ளனர். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
உழவர் சந்தை இடமாற்றம்
அதன்படி, உழவர் சந்தை ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்டு தனியார் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈத்கா மைதானத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதை யொட்டி ஈத்கா மைதானத்தில் தூய்மைப்பணிகளும், கடை அமைப்பதற்கான இட ஒதுக்கீடு 2 நாட்களில் நடைபெற உள்ளன.வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, மே 3-ம் தேதி முதல் ஈத்கா மைதானத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கும். பொதுமக்கள் தங்களுக்கு தேவை யான காய்கறிகளை அங்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.
அதேபகுதியில் கரோனா பரிசோதனையும், கரோனா தொடர்பான விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago