3 மருத்துவ பணியாளர்கள் உட்பட - விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 97 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 மருத்துவப் பணி யாளர்கள் உட்பட 97 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.

நாடு முழுவதும் கரோனா இரண் டாவது அலை தீவிரமானதால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

சிவகாசி அருகே உள்ள மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவப் பணியாளர்கள், விருதுநகர் மருத் துவமனை மருத்துவப் பணியாளர் ஒருவர் உட்பட நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தடுப்பூசிக்கு முன்பதிவு

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுகிறது. இதுவரை சுமார் 1.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனாலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிலவற்றில் தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன.

நகர் பகுதி அரசு மருத்துவ மனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தினந்தோறும் ஏராள மானோர் தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

மேலும், சிலர் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.

தட்டுப்பாடின்றி அனைவருக் கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்