வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பங்கேற்க உள்ள வேட்பாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்ற உள்ள அரசு அலுவலர்கள், வாக்கு எண்ணும் பணியை பார்வையிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வேலூர், காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்றது.
இதில், வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்க உள்ள செய்தியாளர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று ஆர்டிபிசிஆர் எனப்படும் கரோனா பரிசோதனையை செய்து கொண்டதுடன் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொண்டனர். கரோனா பரிசோதனை செய்தவர்கள் தொற்று இல்லை என்ற சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங் களில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனையை செய்து கொண்டதுடன் கோவிஷீல்ட் தடுப்பூசி யையும் போட்டுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago