கரோனா தடுப்பு நடவடிக்கையாக - வேலை நேரம் குறைக்கப்பட்டதால் : வங்கிகளில் அலைமோதிய கூட்டம் :

By செய்திப்பிரிவு

வங்கிகளின் வேலை நேரம் நேற்று முதல் குறைக்கப்பட்டதால், தொழில்துறை நகரமான திருப்பூரில் வங்கிகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வங்கிகள் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் கட்டாயம் அணிந்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் தொழில்துறை நகரம் என்பதால், வங்கிகளின் சேவை அத்தியாவசியமான ஒன்று. இந்நிலையில், தெர்மல் பரிசோதனைக்கு பிறகு வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். காசோலை, வரைவோலை உள்ளிட்ட பிற சேவைகளுக்கு வங்கியின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பெட்டியை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, திருப்பூர் - ஊத்துக்குளி சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், பொதுமக்கள் வரிசையில் நின்று சேவையை பயன்படுத்தினர். இதையொட்டி, வங்கி வளாகத்தில் ஏற்கெனவே தடுப்புகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்