கிணற்றில் வீசப்பட்ட சிசு நாளை குழந்தை பாதுகாப்பு ஆணையம் விசாரணை :

By செய்திப்பிரிவு

பழநி அருகே சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏப். 28-ம் தேதி விசாரணை நடத்த இருக்கிறது.

ஆயக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை மங்கையர்க்கரசி (25). இவர் கர்ப்பமானதால் வெளியே தெரியாமல் இருக்க வீட்டிலேயே குடும்பத்தினர் பிரசவம் பார்த்தனர். இதில் பிறந்த சிசுவை குடும்பத்தினர் கிணற்றில் வீசினர். மங்கையர்க்கரசியை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்

ஆயக்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மங்கையர்க்கரசியின் குடும்பத்தினர் 3 பேரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என ஆணைய உறுப்பினர் ராமராஜ் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை அமர்வு அமைத்து உத்தரவிட்டார். இதில் ஆணையத்தின் உறுப்பினர்கள் வீ.ராமராஜ், முரளிகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நாளை (ஏப்.28) விசாரணை நடத்த உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்