திருப்பத்தூர் மாவட்டத்தில் 153 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,398-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 925 பேர் அரசு மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரேனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மருத்துவ மனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆம்பூர், நாட்றாம் பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்டபகுதிகளில் கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத் தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனை மற்றும் நாட்றாம்பள்ளி சித்த சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 112 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கட்டுப் படுத்தப்பகுதிகள் 304-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு, நோய் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனையும் அதிகரிக் கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 5.51 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூரைச் சேர்ந்த 66 வயதுள்ள ஆண் ஒருவர் கரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 136-ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 4,534 பேர் சிறப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய் தொற்று வேகமாக பரவி வந்தாலும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை அதிகமாக செலுத்தவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றவும், விதிமுறைகளை மீறுவோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago