கடலூரில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததில் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் அருகிலுள்ள தாழங் குடா மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (63). மீனவரான இவர் நேற்று முன்தினம் காயங்களுடன் அதே பகுதியில் உள்ள புத்துகோவில் அருகே உயிரிழந்து கிடந்தார். தேவனாம்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந் தனர்.
இந்நிலையில் கடலூர் டிஎஸ்பிசாந்தி தலைமையிலான போலீஸார்நேற்று குண்டு உப்பலவாடி பகுதி யில் காருடன் நின்றுக் கொண்டிருந்த சுத்துக்குளம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (27), குகன் (24) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருவரும் சேர்ந்து சுப்பிரமணியனை கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும் விசாரணை நடத்தி யதில், சுப்பிரமணியனின் 2-வதுமனைவியின் மகளை வசந்தராயன் பாளையத்தில் கோயில் பூசாரியாக உள்ள சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான ராஜசேகர் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெண் கேட்டும் தர சுப்பிரமணியன் மறுத்துள்ளார். மகளுக்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்வதற் கான ஏற்பாடுகளையும் சுப்பிரமணியன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி ராஜசேகர், அவரது உறவினரான குகனுடன் ஒரு காரில் மஞ்சக் குப்பத்தில் காத்திருந்தார். அப் போது அந்த வழியாக வந்த சுப்பிரமணியனிடம் பெண்ணின் திருமணம் தொடர்பாக பேச வேண்டுமெனக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். கேப்பர்மலை பகுதிக்குச் சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரதுவாயில் துணியை வைத்து அடைத்து தாக்கி கீழே தள்ளி விட்டனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு சடலத்தை காரில் ஏற்றி குண்டுஉப்பலவாடி செல்லும் சாலையில் வீசி விட்டு சென்றதும் தெரிய வந்தது. இதன்பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருமணம் தொடர்பாக பேச வேண்டுமெனக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago