பண்ருட்டி அருகே இரு ஆண்டுகளுக்கு முன்பு முதியவரை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த மணப்பாக் கம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (55). இவர் ஏரிப்பாளையம் ரயில்வே கேட் அருகில் பேக்கிரி கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2.4.2019- ல் தலையில் காயத்துடன் மணப்பாக்கம் விநாயகர் கோவில் அருகில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய புதுப்பேட்டை போலீஸார், குடி போதையில் விழுந்து பத்மநாபன் உயிரிழந்ததாக வழக்கை முடித் தனர்.
இந்நிலையில் பண்ருட்டி போலீஸ் லைனை சேர்ந்த மூதாட்டி சரசு கொலை வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட மணப்பாக்கம் விஸ்வநாதன்(33) என்பவர் போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில் அவர், கடந்த 02.04.2019 அன்று மணப்பாக்கம் பத்மநாபனுடன் மது அருந்தியதாக தெரிவித்துள்ளார். அப்போது பத்மநாபனிடம் நிறைய பணம் இருந்ததை பார்த்துள்ளார். அதனால் அவரை தாக்கி கொலை செய்து அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம், 4 கிராம் நகையை பறித்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் புதுப்பேட்டை போலீ ஸில் பத்மநாபன் மகள் ராஜலட்சுமி (26)கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீஸார் ஏற்கெனவே சிறையில் உள்ள விஸ்வநாதனை, பத்மநாபன் கொலை வழக்கில் கைது செய் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago