8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன - பெண்ணை கொலை செய்து புதைத்த இளைஞர் சிக்கினார் : சாத்தூரில் எலும்புக்கூடு மீட்பு

By செய்திப்பிரிவு

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையைச் சேர்ந்தவர் சத்தியபிரியா (22). இவருக்கும் மதுரை மாவட்டம், தும்மக்குண்டு வைச் சேர்ந்த வசந்தபாண்டி என்பவருக்கும், கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் தந்தை வீட்டுக்கு வந்தபோது சத்தியபிரியா திடீரென காணாமல் போனார்.

இதுகுறித்து, அருப்புக் கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து சத்திய பிரியாவைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவரது கணவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து தாலுகா போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் சத்தியபிரியா வுக்கும் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. மேலும், திருமணத்துக்குப் பிறகும் சத்தியபிரியாவுக்கு அந்த இளைஞருடன் பழக்கம் இருந்துள்ளது. ஒருநாள் அவரைப் பார்க்க சத்தியப்பிரியா சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அதில் அப்பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது. இந்நிலையில் சம்பந்தப் பட்ட சாத்தூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்துபோது, அவர் சத்தியப் பிரியாவைக் கொலை செய்து சாத்தூர் போக்குவரத்து நகர் பகுதி யில் புதைத்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் அந்த இடத்தில் தோண்டியபோது, சத்தியப்பிரியாவின் எலும்புக் கூடு கிடைத்தது. அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், அந்த இளை ஞரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்