வேலூர் மாவட்டத்தில் மே முதல் வாரத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு, தனியார் மருத் துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் கரோனா முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதிக் கப்படும் நோயாளிகளின் எண் ணிக்கை, படுக்கை வசதிகள், ஆக் சிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘விஐடி பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையத்தில் மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். மே மாதம் முதல் வாரத்தில் கரோனா பரவல் கூடுதலாக வாய்ப்புள்ளது. அப்போது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்களும் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தலைமை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago